காரில் கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்


காரில் கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
x

சீர்காழி அருகே காரைக்காலில் இருந்து காரில் கடத்தப்பட்ட ரூ. 3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை

சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே எடக்குடி வடபாதி பகுதியில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து 2 கார்கள் வேகமாக வந்தன. அந்த கார்களை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 50 அட்டைப் பெட்டிகளில் 2,400 மதுபாட்டில்கள் இருந்தன.

மதுபாட்டில்கள் பறிமுதல்

இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், காரைக்காலில் இருந்து மணல்மேடு கடலங்குடிக்கு அந்த மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில், மது கடத்தி வந்த காரைக்கால் பகுதியை சேர்ந்த ரகு, கவுதம், மோகன்ராஜ், கிருஷ்ணகுமார், சோமுராஜ், செல்வராஜ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள், 2 கார்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story