மீன் வளர்க்க ரூ.3 லட்சம் மானியம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீன்வளர்க்க ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீன் வளர்க்க மானியம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீன்வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான பயோ பிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்யும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் திட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும் திட்ட செலவின தொகை ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில், பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 40 சதவீத மானியம் ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இத்திட்டத்தில் இம்மாவட்ட இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், வேலூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
0416- 2240329 மற்றும் 9384824248 என்ற எண்ணிலும், sdfifvelinre1@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.