பொள்ளாச்சியில் மது விற்ற 3 பேர் கைது-127 மதுபாட்டில்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் மது விற்ற 3 பேர் கைது-127 மதுபாட்டில்கள் பறிமுதல்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ஏ.டி.எஸ்.சி. தியேட்டர் ரோட்டில் உள்ள ஒரு மதுபான பாரில் இரவு சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையிலான போலீசார் பாரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தென்காசியை சேர்ந்த அருண்குமார் (வயது22), சிவகங்கையை சேர்ந்த பாலா (42), கோவில்பட்டியை சேர்ந்த ராஜன் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 127 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story