தொட்டில் அறுந்து விழுந்து 3 மாத குழந்தை சாவு
தொட்டில் அறுந்து விழுந்து 3 மாத குழந்தை சாவு
மதுரை
திருமங்கலம்,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி ஜீவ புனிதம். இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய 3 மாத பெண் குழந்தை பிரியதர்ஷினி.
கடந்த 1-ந் தேதி தொட்டிலில் போட்டு குழந்தையை தூங்க வைப்பதற்காக தாலாட்டி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் அறுந்து விழுந்தது. இதில் தரையில் விழுந்த குழந்தை பிரியதர்ஷினி படுகாயம் அடைந்தது. இதையடுத்து பதறிய பெற்றோர் குழந்தையை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று குழந்தை பிரிதர்ஷினி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story