நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 3 மாதம் சிறை


நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 3 மாதம் சிறை
x

நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் வடக்கு வள்ளியூரை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 28). இவருக்கு ராதாபுரம் 2-ம் வகுப்பு நிர்வாக துறை நடுவர் மூலம் 6 மாதத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்பும் நம்பிராஜன் அடிதடி மற்றும் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனவே நன்னடத்தை பிணையை மீறி குற்ற செயலில் ஈடுபட்ட நம்பிராஜனை ராதாபுரம் 2-ம் வகுப்பு நிர்வாக துறை நடுவர் 3 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story