மின்வாரிய ஊழியருக்கு 3 மாத சிறை
மின்வாரிய ஊழியருக்கு 3 மாத சிறை
வால்பாறை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக(போர்மென்) பணியாற்றி வருபவர் மயில்சாமி(வயது 51). இவர் கடந்த 2013-ம் ஆண்டு வால்பாறை மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றினார்.
அப்போது வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் பகுதியை சேர்ந்த முனீஸ்வரன்(35) என்பவரிடம் வட்டி இல்லாத கடனாக ரூ.2 லட்சம் வாங்கினார். இதை 3 தவணைகளாக திரும்பி வழங்கிவிடுவதாக உறுதி அளித்தார்.
மேலும் அவரிடம், ரூ.2 லட்சத்துக்கான காசோலையை கொடுத்து வைத்திருந்தார்.
இதற்கிடையில் கடனை திரும்ப வழங்க மயில்சாமி காலதாமதம் செய்ததால், முனீஸ்வரன் அந்த காசோலையை வால்பாறையில் தான் கணக்கு வைத்துள்ள வங்கியில் டெபாசிட் செய்ய சென்றார். ஆனால் மயில்சாமியின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால், அந்த காசோலை திரும்பி வந்துவிட்டது. இந்த மோசடி தொடர்பாக வால்பாறை கோர்ட்டில் முனீஸ்வரன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், மயில்சாமிக்கு 3 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை 2016-ம் ஆண்டு முதல் 9 சதவீத வட்டியை சேர்த்து முனீஸ்வரனுக்கு வழங்க உத்தரவிட்டார். ஒரு மாதத்துக்குள் வழங்ாவிட்டால், மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.