விழுப்புரம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது
கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
உயிரிழப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story