காதலிக்க மறுத்த மாணவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது


காதலிக்க மறுத்த  மாணவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது
x

காதலிக்க மறுத்த மாணவி வீட்டில் குண்டு வீச்சு சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


காதலிக்க மறுத்த மாணவி வீட்டில் குண்டு வீச்சு சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாணவி வீட்டில் குண்டு வீச்சு

மதுரை சின்னகண்மாய் தெருவை சேர்ந்தவர் மணிரத்னம். இவர் 11-ம் வகுப்பு மாணவிைய காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும் தெப்பக்குளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மணிரத்னத்தை கைது செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் மாணவியை பின்தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிரத்னம் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை மாணவி வீட்டில் வீசினார்.

3 பேர் கைது

காதலிக்க மறுத்த மாணவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சில மணி நேரத்திலேயே பெட்ரோல் குண்டை வீசிய மணிரத்னம், அவருடைய நண்பர் பார்த்தசாரதி ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்திற்கு மேலும் சிலர் உதவி செய்தது தெரியவந்தது. அதில் நண்பர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் பிடித்து கொடுத்ததும், 2 பேர் அவரது வீட்டின் அருகே கண்காணித்து வந்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு உதவிய மணிரத்னத்தின் நண்பர்கள் ஜெய், திலீப், ஜவகர் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். அதன் மூலம் இந்த சம்பவத்தில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


Related Tags :
Next Story