அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது


அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது
x

விக்கிரமசிங்கபுரம் அருகே அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மனைவி துர்கா தேவி (வயது 37). இவர் தனக்கு சொந்தமான 205 கிராம் நகையை விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் உள்ள கடையில் அடகு வைத்தார். அதற்கு உண்டான அசலையும், வட்டியையும் கடையில் கொடுத்தார். ஆனால் நகையை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுபற்றி துர்கா தேவி விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்.விசாரணையில் அடகு கடை உரிமையாளர் அருண் தாமஸ், அவரது தம்பிகள் அருண் பிரபாகரன், அருண் பிரசாத் ரூபன் மற்றும் அவரது தாயார் ஜெயந்தி, தங்கை அன்பு சுந்தரி, அருண் தாமஸ் மனைவி ஷர்மி அனுசியா, மற்றும் அடகு கடை மேலாளர் மணிகண்டன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் அருண் தாமஸ், அருண் பிரபாகரன், ஜெயந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற 4 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story