ஊழியரை தாக்கிய 3 பேர் கைது
ஊழியரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு மேலாளர் கணேசன், காசாளர் நடராஜன், ஊழியர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்கள் சிலர் பெட்ரோல் பங்கில் கற்களை வீசி தகராறில் ஈடுபட்டு அங்குள்ள கண்காணிப்பு கேமராவை உடைத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் மீனாட்சி சுந்தரத்தை தாக்கி பெட்ரோல் பங்கை தீ வைத்து எரித்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெற்கு போலீசில் மேலாளர் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த காளிராஜ் (வயது 21), தெற்கு மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்த மோசஸ் ராஜ் (23), மாஸ்கோ ராம் (21) ஆகிய 3 பேரும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.