பெயிண்டரை தாக்கிய 3 பேர் கைது


பெயிண்டரை தாக்கிய 3 பேர் கைது
x

பெயிண்டரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாருக்கும் (வயது 24), அசோக்கிற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசோக் அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து சந்தோஷ்குமார், நம்பிராஜ் (25), சதீஷ்குமார் (25) ஆகிய 3 பேரும் அசோக் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் தொடர்பாக பிரச்சினை செய்து அவரை தகாதவார்த்தையால் திட்டியுள்ளனர். இதனை அசோக்கின் உறவினரான பெயிண்டர் கார்த்திக் (35) தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், நம்பிராஜ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து கார்த்திக்கை தாக்கி தகாதவார்த்தையால் திட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீசார் சந்தோஷ்குமார், நம்பிராஜ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story