வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
வாலிபரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்அருகே உள்ள தொருவளுர் மேற்குத்தெருவை சேர்ந்தவர் பழனி என்பவரின் மகன் அபிஸ்குட்டி (வயது 20). இவர் தனது நண்பர்களுடன் உத்தரகோசமங்கை அருகே பனைக்குளத்தில் நடைபெற்ற கபடி போட்டிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். முதுனாள் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சாய்பாபா கோவில் அருகில் வந்தபோது மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்துள்ளனர். மேலும் முன்விரோதம் காரணமாக அபிஸ்குட்டி தரப்பினரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அபிஸ்குட்டி சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வன்னிவயல் முருகேசன் மகன் பர்வீன்ராஜ் (22), பெருமாள் மகன் பார்த்திபன் (21), முகம்மது ஜின்னா மகன் ஜமீல்ஹசன் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.