வாலிபரை தாக்கிய 3 பேர் கைது


வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
x

விக்கிரமசிங்கபுரம் அருகே வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் மேட்டு தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் வெங்கடேஷ் (வயது 19). இவர் நேற்று விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோடாரங்குளம் வேப்பங்குளம் காலனிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சிவசுடலை (19), ராமகிருஷ்ணன் மகன் சிவலிங்கம் (23), அசோக் குமார் மகன் சுந்தர்ராஜ் (24) ஆகியோர் வழிமறித்து, எங்கள் ஊருக்குள் நீ எப்படி வேகமாக வரலாம் என கேட்டு அவரை தாக்கியும், அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனையும் பறித்துள்ளனர். இதுபற்றிய புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.


Next Story