தொழிலாளிகளை தாக்கிய 3 பேர் கைது
பொள்ளாச்சி அருகே தொழிலாளிகளை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் சிவா (வயது 22). இவர் பொள்ளாச்சி அருகே அகிலாண்டபுரத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பர் சுபாஷ் என்பவருடன் தேங்காய் உரிக்கும் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். சாமியாண்டிபுதூர் பகுதியில் வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். 3 பேரும் சாலையின் இடதுபுறம் வருவதற்கு பதிலாக வலதுபுறமாக வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சிவா, சுபாஷ் ஆகியோர் கேட்டதற்கு 3 பேரை தகாத வார்த்தையால் திட்டி அவர்களை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த 2 பேரும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திம்மங்குத்துவை சேர்ந்த மதியழகன், சாத்துப்பாறைசித்தூரை சேர்ந்த மகேந்திரன், கோபால் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.