பசும்பலூர் ஆற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது


பசும்பலூர் ஆற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது
x

பசும்பலூர் ஆற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் ஆற்றில் அனுமதி இன்றி அதே ஊரைச் சேர்ந்த முருகன் (வயது 35), வேல்முருகன் (40), சாமிக்கண்ணு (45) ஆகிய 3 பேரும் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற வி.களத்தூர் போலீசார் 3 பேரையும் கைது செய்து மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story