கத்திமுனையில் தொழிலாளியிடம் பணம்பறித்த 3 பேர் கைது
கத்திமுனையில் தொழிலாளியிடம் பணம்பறித்த 3 பேர் கைது
கணபதி
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (வயது47). இவர், கோவை ரத்தினபுரியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று ராஜா கோவை ரத்தினபுரி சாஸ்திரி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 3 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து ரூ.300-ஐ பறித்து கொண்டு தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் தொழிலாளியை மிரட்டி கத்திமுனையில் பணம் பறித்தது ரத்தினபுரி பகுதியை சேர்ந்த வெல்டர் கார்த்திக் பாண்டி (23), காந்திபுரத்தை சேர்ந்த டேனியல் (24), ரத்தினபுரி கல்கி நகரை சேர்ந்த போட்டோகிராபர் விக்ரம் (21) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.