கத்திமுனையில் பணம் பறித்த 3 பேர் கைது
கத்திமுனையில் பணம் பறித்த 3 பேர் கைது
கோவை
கோவை கணபதிபுதூரை சேர்ந்தவர் கணேஷ் (வயது 32). பெயிண்டர். இவர் சம்பவத்தன்று ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் மது பாட்டில் வாங்க பணம் தருமாறு கணேசனை மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1,000-ஐ பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேஷ், இது குறித்து ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெயிண்டரிடம் பணம் பறித்தது எரிமேடு சவுரிபாளையம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (47), உக்கடம் புல்லுக்காட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் (33), புலியகுளம் புது ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சகாயராஜ் (24) மற்றும் சுதாகர் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் மணிகண்டன், பாலகிருஷ்ணன், சகாயராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான சுதாகரை தேடி வருகின்றனர்.