சூதாடிய 3 பேர் கைது


சூதாடிய 3 பேர் கைது
x

சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கரூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது முத்துராஜாபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த சேகர்(வயது 42), ஜோதி(47), சரவணன்(38) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story