சூதாடிய 3 பேர் கைது


சூதாடிய 3 பேர் கைது
x

எருமப்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள கஸ்தூரிபட்டி புதூர் ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடுவதாக எருமப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 3 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. விசாரணையில் வரதராஜபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த வெள்ளையன் மகன் கணேசன் (வயது 62), எருமப்பட்டி ஜீவானந்தம் தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் கோபாலகிருஷ்ணன் (33), எருமப்பட்டி கணேச தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் சந்துரு (33) ஆகிய 3 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. பின்னர் போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.550 பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story