கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது


கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
x

பணியில் இருந்த ரெயில்வே போலீஸ் ஏட்டுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ெரயில்வே பாதுகாப்புபடை போலீஸ் ஏட்டு பக்கிரிசாமி (வயது 47). இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது ரெயில் நிலைய முதலாவது நடைமேடையில் சிலர் நின்றுகொண்டு சத்தம்போட்டு கொண்டிருந்தனர். அதை கேட்ட அவர் அங்கு சென்று அவர்களை சத்தம் போடாதீர்கள், நடைமேடையை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த வாலிபர்கள், திடீரென்று பக்கிரிசாமியின் வாக்கிடாக்கியை பறித்து உடைத்ததோடு அவரை கீழேதள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து பக்கிரிசாமி மயிலாடுதுறை ெரயில்வே போலீசில் புகார்கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் மூலம் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டனர். இதை தொடர்ந்து போலீஸ் ஏட்டுவை தாக்கியதாக மயிலாடுதுறை ஆற்றங்கரைத்தெரு கங்கை நகரை சேர்ந்த சேகர் மகன் விஜய் (21), குமார் மகன் அஜித்குமார் (20), கிட்டப்பாத்தெருவை சேர்ந்த நீலமேகம் மகன் விஜய் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story