அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
x

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு

தீபாவளி சீசன் நெருங்குவதால் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு, மற்றும் கருந்திரி தயாரிக்கும் பணி மீண்டும் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாத்தூர் துணை சூப்பிரண்டு நாகராஜ் உத்தரவின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் வெற்றி முருகன், ஜோதிராஜ், கோபாலகிருஷ்ணன், ஜவகர் ஆகியோர் தலைமையிலான போலீசார் சல்வார்பட்டி, இரவார்பட்டி, பேர் நாயக்கன்பட்டி, தெற்கு அணை கூட்டம், துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர்.

5 பேர் கைது

அப்போது இரவார்பட்டி மாட்டு தொழுவத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஈஸ்வரன் (வயது 39), முத்துமாரி (வயது 45) ஆகிய 2 பேரையும் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் கைது செய்தார். பின்னர் அவர்களிடம் இருந்த 15 கிலோ சோல்சா வெடிகள் மற்றும் தடை செய்யப்பட்ட சரவெடிகள், மூலப்பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

பேர்நாயக்கன்பட்டியில் ஜெயராம் (68) என்பவரின் வீட்டில் பாம்பு மாத்திரைகள் தயார் செய்து கொண்டிருந்தபோது அவரையும் போலீசார் கைது செய்தனர். தெற்கு ஆனை கூட்டம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (41) என்பவர் வீட்டில் விற்பனைக்கு வைத்திருந்த 39 பெட்டி பட்டாசுகளையும் பறிமுதல் செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்தனர். மீனாட்சிபுரத்தில் சங்கரலிங்கம் (62) என்பவரிடம் இருந்து 16 குரோஸ் வெள்ளைதிரிகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story