செஞ்சி லாட்ஜில் விபசாரம் 3 பேர் கைது


செஞ்சி லாட்ஜில் விபசாரம் 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி லாட்ஜில் விபசாரம் 3 பேர் கைது

விழுப்புரம்

செஞ்சி

செஞ்சி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையில் போலீசார் கடைவீதியில் உள்ள ஒரு லாட்ஜில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்திக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து லாட்ஜ் மேனேஜர் செல்வம்(வயது 57), கப்பை கிராமம் கமலக்கண்ணன்(52), திருவண்ணாமலை மாவட்டம் பாலாந்தல் கிராமம் வேலு(56), நடுப்பட்டு சேகர்(44) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கமலக்கண்ணன், வேலு, சேகர் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story