போதை பொருள் விற்ற 3 பேர் கைது


போதை பொருள் விற்ற 3 பேர் கைது

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா மற்றும் போலீசார் தாழையூத்து பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போதை பொருளை விற்பனைக்கு கொண்டு வந்த சிறுமுகையை சேர்ந்த மார்ஷல், மேட்டுப்பாளையம் சேரன்நகரை சேர்ந்த விஜய் ஆனந்த், ஜெபாஸ்டியன் ஆகிய 3 பேரையும் கைது செய்த னர். அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 16 கிராம் எடையுள்ள போதை பொருள்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story