கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அண்ணாநகர் 3-வது தெரு சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக, தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த கணேசன் மகன் பிரபு வினோத்குமார் (வயது 25), முகமூத் முகமது மகன் மேத்தாபிள்ளை மரைக்காயர் (25), மைதீன் அப்துல் காதர் மகன் ஜமால் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பிரபு வினோத்குமார் மீது ஏற்கனவே தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகளும், மேத்தாபிள்ளை மீது தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.

1 More update

Next Story