கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கோயம்புத்தூர்

கோவை, ஜூலை

கோவை செல்வபுரம் அருகே உள்ள அசோக் நகரில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக செல்வபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த பழனி அருகே உள்ள புலிகோட்டையூரை சேர்ந்த நல்லுசாமி (வயது 46) கூலித் தொழிலாளி என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, ரூ.530 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதே போல் போத்தனூர் போலீசார் மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மோகன் நகர் பாலத்துக்கு அடியில் கஞ்சாவை பதுக்கி விற்ற வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பிரவீன் (21) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கவுண்டம்பாளையம் அரசு பள்ளி அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற முல்லை நகரை சேர்ந்த கார்த்தி (22) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story