கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2022 6:45 PM GMT (Updated: 18 Dec 2022 6:46 PM GMT)

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே கெரடா பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவரை சோதனை செய்த போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், வள்ளுவர் காலனியை சேர்ந்த உமாசுதன் (வயது 22) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர் நகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரன், பவுலோஸ் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வெவ்வேறு இடங்களில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக செவிடிப்பேட்டையை சேர்ந்த டாமி (வயது 56), கோழிப்பாலம் தங்கவேல் (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story