கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

சிங்காநல்லூர்

கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கக்கன் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த வாலிபர்களை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்களை போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவா்கள், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் கோகுல கண்ணன் (வயது 25), உப்பிலிபாளையத்தை சேர்ந்த சுதர்சன் (22), சவுரிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் (22) ஆகிய 3 பேர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா, கஞ்சா விற்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.13 ஆயிரத்து 220 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story