லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்படடனர்.
நாகூர்:
நாகூர் யானை கட்டி முடுக்கு சந்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக நாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின்னாக முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் கையில் மறைத்து வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் நாகூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த உதுமான் மகன் யூசுப் (வயது38), தைக்கால் தெருவை சேர்ந்த சேக்தாவூது மகன் முகமது மாலிக் (36), காரைக்கால் புதுத்தெருவை சேர்ந்த சுஜாஹிதீன் (51) என்பதும், இவர்கள் லாட்டரி சீட்டு விற்றதும் ெதரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.