லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
x

லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை நகரப் பகுதிக்குட்பட்ட காவிரி நகர், சுங்ககேட், மீன்கார தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்தப் பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற புதுக்கோர்ட் தெருவை சேர்ந்த ஷாஜகான் (வயது 42), எலிமெண்டரி ஸ்கூல் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (49), பிள்ளை தோப்பு தெருவை சேர்ந்த சரவணன் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story