ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது


ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
x

மயிலாடுதுறையில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

மயிலாடுதுறை


மயிலாடுதுறை, திருவாரூர் சாலை கேணிக்கரை பகுதியில் உள்ள காய்கறி கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சம்பந்தப்பட்ட காய்கறி கடையில் கேரள மாநில ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த சரவணன் (வயது 38), மயிலாடுதுறை புதுத்தெருவை சேர்ந்த பாபு என்கிற முத்துக்குமார் (45) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இதேபோல மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி பகுதியில் கேரள மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்த நல்லத்துக்குடி வி.ஐ.பி. நகரைச்சேர்ந்த மேகநாதன் (73) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story