கடையில் திருடிய 3 பேர் கைது
வடலூரில் கடையில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
கடலூர்
வடலூர்:
வடலூர் மாருதி நகர் பழமுதிர்ச்சோலை தெருவை சேர்ந்தர் சதீஷ் (வயது 45). இவர் நெய்வேலி ரோட்டில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த பித்தளை குத்து விளக்கு, 2 காமாட்சி அம்மன் விளக்கு, 2 விபூதி தாம்பூல தட்டு ஆகியவற்றை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கடையில் திருடியது வடலூர் பகுதியை சேர்ந்த 18, 17 மற்றும் 15 வயதுடைய 3 சிறுவன்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story