லாரி டியூப்பில் சாராயம் கடத்திய 3 பேர் கைது


லாரி டியூப்பில் சாராயம் கடத்திய 3 பேர் கைது
x

கணியம்பாடி அருகே லாரி டியூப்பில் சாராயம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் கணியம்பாடியில் இருந்து கண்ணமங்கலம் செல்லும் சாலையில் உள்ள வாகன சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆரணியில் இருந்து வேலூர் நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்தவர்கள் தெள்ளை கிராமத்தை சேர்ந்த ராம்குமார், கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமு மற்றும் நம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த செல்வம் என்பதும், இவர்கள் 15 லாரி டியூப்களில் சுமார் 450 லிட்டர் சாராயத்தை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து கார் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story