செல்போன் திருடிய 3 பேர் கைது
செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
திருமங்கலம்
திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 27). இவர் உடல்நிலை சரியில்லாததால் கடந்த மாதம் 29-ந்தேதி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது இவரது செல்போன் உள்பட 3 பேரின் செல்போன்கள் காணாமல் போய்விட்டது. மர்ம நபர்கள் அவற்றை திருடி விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசில் நிலையத்தில் சண்முகப்பிரியா புகார் கொடுத்திருந்தார். புகாரின் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் அரசு மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு தேடி வந்தனர். இந்நிலையில் செல்போன்களை திருடியது தொடர்பாக திருமங்கலம் அருகே டி.கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன் (25). மற்றும் அவருடைய நண்பரான திண்டுக்கல்லை சேர்ந்த தங்கராஜ் மகன் ஆனந்தமணி (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.