தாமிரக்கம்பிகள் திருடிய 3 பேர் கைது


தாமிரக்கம்பிகள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 Sep 2022 6:45 PM GMT (Updated: 29 Sep 2022 6:46 PM GMT)

மந்தாரக்குப்பம் அருகே தாமிரக்கம்பிகள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்

மந்தாரக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வீணங்கேனி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் சாக்குமூட்டையுடன் வந்த 3 பேரை போலீசார் மறித்து விசாரித்தனர். போலீசாரை பார்த்ததும், அவர்கள் மோட்டார் சைக்கிள்களை சாலையிலேயே போட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் விரட்டிச்சென்று 3 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 47), ஆபத்தாரணபுரத்தை சேர்ந்த ராமசாமி மகன் சிவா(49), புதுநகர் முத்துராஜ் மகன் சரவணன்(38) ஆகியோர் என்பதும், இவர்கள் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் இருந்து 32½ கிலோ தாமிரக்கம்பிகள், 5 கிலோ அலுமினிய கம்பிகளை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரன் உள்பட 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த தாமிரக்கம்பிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story