மின்மோட்டார் திருடிய 3 பேர் கைது

திசையன்விளை அருகே மின்மோட்டார் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த அப்புவிளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 4 மின்மோட்டார்கள் மற்றும் 2 இரும்பு குழாய்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக அதன் மேலாளர் ராஜன், திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அப்புவிளையை சேர்ந்த அசோக்ராஜா (வயது 25), ரமேஷ் ராஜா (25), முருகேசபுரம் ஜெகதீஷ் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து திருட்டு போன 4 மின்மோட்டார்களையும், இரும்பு குழாய்களையும் போலீசார் மீட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





