ஆடு திருடிய 3 பேர் கைது
வெண்ணந்தூர் அருகே ஆடு திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெண்ணந்தூர்
ஆடு திருட்டு
வெண்ணந்தூர் அருகே உள்ள பி.மேட்டூர், மேற்கு வலசு, தோப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது65). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் மேச்சலுக்கு சென்ற ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து மணி வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பள்ளிக்கூட தெரு பகுதியை சேர்ந்த மத்தராயன் மகன் சின்னதுரை (39), பிரான்சிஸ் மகன் ராஜ்குமார் (36), அய்யம்பாளையம், புதூர் மலையான்பட்டி, புதூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் கோவிந்தன் (40) ஆகியோர் மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை திருடிச் சென்றது தெரிய வந்தது.
3 பேர் கைது
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் ஆடு மற்றும் ஆட்டை திருட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.