ஆடு திருடிய 3 பேர் கைது
பொள்ளாச்சி அருகே ஆடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோட்டூர்
பொள்ளாச்சி அருகே ஆடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆடு திருட்டு
பொள்ளாச்சி அருகே ரங்கசமுத்திரம் பகுதியில் நகர கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். மேலும் கையில் ஒரு ஆட்டை பிடித்து வைத்திருந்தனர்.
இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார், அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினர். இதையடுத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அதில், ஆட்டை திருடி விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
கைது
இதற்கிடையில் அவர்கள் பிடிபட்ட இடம் கோட்டூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால், அந்த பகுதி போலீசில் 3 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் ஜமீன்ஊத்துக்குளியை சேர்ந்த மாதவன் பிரகாஷ் (வயது 19), அஜித்குமார் (19), வெங்கட்ராமன் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் பொள்ளாச்சி தாலுகா, வடக்கிபாளையம் போலீஸ் நிலைய பகுதிகளிலும் ஆடுகளை திருடி இறைச்சி கடைகளில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின்னர் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆடு பறிமுதல் செய்யப்பட்டது.