தனியார் கம்பெனியில் இரும்பு பொருட்கள் திருடிய 3 பேர் கைது


தனியார் கம்பெனியில் இரும்பு பொருட்கள் திருடிய 3 பேர் கைது
x

ஆற்காடு அருகே தனியார் கம்பெனியில் இரும்பு பொருட்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

ஆற்காடு அடுத்த விலாரி கிராமத்தில் தனியார் எண்ணெய் கம்பெனி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கம்பெனி பயன்பாட்டில் இல்லாத பழைய இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இதனை கம்பெனியில் வேலை செய்பவர்கள் பார்த்துவிட்டு அவர்களை பிடித்து திமிரி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆற்காடு அடுத்த புண்ணப்பாடி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 23), தினேஷ் (19), விலாரி கிராமத்தை சேர்ந்த சாரதி (20) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிரு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 35 கிலோ பழைய இரும்பு பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story