கள்ள நோட்டு வழக்கில் 3 பேர் கைது
கள்ள நோட்டு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
கர்நாடக மாநிலம் பசவேஷ்சவுக் நிப்பான் போலீஸ் நிலையத்தில் கடந்த 1994-ம் ஆண்டு கள்ள நோட்டு வழக்கில் தொடர்புடைய சிவகாசி செல்லியார்அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி (வயது 51), முனீஸ்வரன் காலனியை சேர்ந்த பாண்டியன் என்ற பாண்டி (60), விருதுநகர் ரோசல்பட்டி ரோட்டை சேர்ந்த மூவேந்தர் என்ற மகேந்திரன் (61) ஆகிய 3 பேரும் கடந்த 24 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் சிக்கோடி மாவட்ட நீதிமன்றம் இந்த 3 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்தது. இதை தொடர்ந்து கர்நாடக போலீசார் கேட்டுக் கொண்டதற்கிணங்க தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் சிவகாசி சப்-இன்ஸ்பெக்டர் சுபக்குமார் தலைமையில் தனிப்படையினர் மேற்படி 3 பேரையும் கைது செய்து சிவகாசி முதல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கர்நாடகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story