குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
x

குண்டர் சட்டத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்


திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 44). சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் ஜான் பீட்டர் (31). இவர்கள்2 பேரும் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் இவர்களை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவின்பேரில் சுப்புராஜ், ஜான் பீட்டர் ஆகிய 2 பேரையும் திருத்தங்கல் போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

அதேபோல வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (38). இவர் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையிலும் தொடர்ந்து பல்வேறு குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரைத்தார். இதையடுத்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவின்பேரில் கூமாப்பட்டி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் மகேசை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story