3 பேர் குண்டர் சட்டத்தில் கைது


3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

குடியாத்தத்தை அடுத்த கல்லூர் மருத்துவ காலனி பகுதியை சேர்ந்தவர் அஸ்லாம் என்கிற இம்ரான். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆர்.கொல்லப்பல்லி கிராமத்தை சேர்ந்த குடியரசு என்கிற குடியரசன் என்பவரும் கஞ்சா விற்றதாக பலமுறை கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு இம்ரான் தான் காரணம் என நினைத்து சேங்குன்றம் கிராமத்தை சேர்ந்த வேல்குமார், பூவரசன் ஆகியோருடன் சென்று கடந்த மாதம் 11-ந் தேதி இம்ரானை குத்தி கொலைசெய்தார்.

இது குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப் பதிவு செய்து குடியரசு, வேல்குமார், பூவரசன் ஆகிய மூன்று பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

1 More update

Next Story