கஞ்சாவுடன் 3 பேர் கைது
கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை
அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரை தடுத்து நிறுத்தினர். சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த ரியாஸ் அஹமது (வயது 22), அரக்கோணம் சோமசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (21), மங்கமாபேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (18) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story