கல்குவாரியில் திருடிய 3 பேர் சிக்கினர்


கல்குவாரியில் திருடிய 3 பேர் சிக்கினர்
x

நெல்லையில் கல்குவாரியில் திருடிய 3 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. 'ஏ' காலனியைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது 58). இவர் முன்னீர்பள்ளம் அருகே பிராஞ்சேரியில் கல்குவாரி நடத்தி வந்தார். தற்போது அந்த குவாரி செயல்படவில்லை. இதனால் அங்கு பணியாளர்கள் தங்கும் அறையில் மோட்டார் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன. அங்கு மாடசாமி என்பவர் காவலாளியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் மாடசாமி வீட்டுக்கு சென்ற நேரத்தில் குவாரி கம்பிவேலியை வெட்டி உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கு அறையில் வைக்கப்பட்டு இருந்த மோட்டார், இரும்பு ரோலர், கியாஸ் அடுப்பு, கியாஸ் சிலிண்டர், கடப்பாரை கம்பிகள் என சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் உவரி ஆனைக்குடியை சேர்ந்த பட்டுராஜா மகன் சக்திகுமார் (27), மணிமுத்தன்குளத்தை சேர்ந்த மைக்கில் ராஜா மகன் மாரிதுரை (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story