மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் சிக்கினர்


மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் சிக்கினர்
x

பழனி அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் அதிகரித்து வந்தது. இதனால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். மேலும் பழனி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தாராபுரம் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், சேலத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 32), வினோத் (27), பழனியை சேர்ந்த சுரேஷ் (26) என்றும், பழனி பகுதியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.





1 More update

Next Story