வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை
x

ஓசூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

மேற்பார்வையாளர்

வேலூர் மாவட்டம் தொரப்பாடியை சேர்ந்தவர் தேவா (வயது 26). இவர் ஓசூர் சாந்தபுரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். தங்கை திருமண விஷயமாக தனது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறகிறது.

இதனால் மனமுடைந்த தேவா சாந்தபுரம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி

சூளகிரி அருகே உள்ள மைதாண்டப்பள்ளியை சேர்ந்தவர் சூர்யா (24). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த சூர்யா, அச்செட்டிப்பள்ளியில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பேரில் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் நிறுவன ஊழியர்

மத்திகிரி அருகே உள்ள எஸ்.முதுகானப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது பெற்றோரிடம் புதிய மோட்டார்சைக்கிள் வாங்கி தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்காக அவரது பெற்றோர் ரூ.1 லட்சம் கொடுத்தனர்.

ஆனால் வெங்கடேஷ் மோட்டார்சைக்கிள் வாங்காமல் பணத்தை செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கடேசின் பெற்றோர் கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த வெங்கடேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story