பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை


பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 29 Aug 2022 7:15 PM GMT (Updated: 29 Aug 2022 7:20 PM GMT)

பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தொழிலாளி

திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 37). கூலித்தொழிலாளி. திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிறது. கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் சோகமாக காணப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை

திருச்சி திருவானைக்காவல் நடு கொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி மாரியாயி (23) இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மகள்கள் உள்ளனர். மாரியாயி வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் காண்பித்தும் குணம் ஆகவில்லை.

இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டதாரி பெண் சாவு

முசிறியை அடுத்த சூரம்பட்டியைச் சேர்ந்த கனகசுந்தரம் மகள் திவ்யா (21). பி.எஸ்.சி.பட்டதாரி. சம்பவத்தன்று பெற்றோர் தோட்டத்துக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story