விஷவண்டுகள் கடித்து 3 பேர் மயக்கம்


விஷவண்டுகள் கடித்து 3 பேர் மயக்கம்
x

விஷவண்டுகள் கடித்து 3 பேர் மயக்கம்

திருவாரூர்

நன்னிலம் அருகே உள்ள தென்குடி பகுதியை சேர்ந்தவர்கள் அலமேலு மங்கை(வயது54), தனலட்சுமி(65), சிவா(32). இவர்கள் 3 பேரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் பருத்தி எடுக்கும் வேலைக்கு சென்றுள்ளனர். வயலில் பருத்தி எடுத்து கொண்டிருந்த போது, பனை மரத்தில் கூடுக்கட்டி இருந்த விஷ வண்டுகள் பறந்து வந்து 3 பேரையும் கடித்தது. இதில் மயக்கம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.


Next Story