வெவ்வேறு விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி


வெவ்வேறு விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி
x

வெவ்வேறு விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

திருச்சி

வெவ்வேறு விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

கல்லூரி மாணவர்

மண்ணச்சநல்லூர் எம்.ஆர்.பாளையம் சனமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மகன் ஜேம்ஸ் ஜெபகரன் (வயது 19). இவர் கள்ளிக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் புழுதேரி சீதப்பட்டியில் வாடகை வீட்டில் தாயுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று ஜேம்ஸ் ஜெபகரன் கல்லூரி சென்றுவிட்டு அம்மாபேட்டை பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு திருச்சி- திண்டுக்கல் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் இனாம்குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த மணப்பாறை பெத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (48) என்பவரை கைது செய்தனர்.

அரசு பஸ்மோதி பலி

காஞ்சீபுரம் மாவட்டம் ஈச்சம்பாக்கம் வேட்டுவன் கேணி சங்கர் தெருவை சேர்ந்தவர் அருள்மணி (43). இவர் பெட்டவாய்த்தலை அருகே உள்ள சிறுகமணி அக்ரஹாரம் பகுதியில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, கரூரில் இருந்து திருச்சி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயிலில் அடிப்பட்டு சாவு

மணப்பாறையை அடுத்த காட்டுப்பட்டி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரெயிலில் அடிப்பட்டு இறந்துள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என திருச்சி ரெயில்ேவ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story