பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது


பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கைது
x

பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த சீயஞ்சேரியை சேர்ந்த 18 வயதுடைய ஆட்டோ டிரைவருக்கு காக்களூர் பகுதியை சேர்ந்த திருமணம் ஆன 26 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2 பேரும் கடந்த சில மாதங்களாக நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை ஆட்டோவில் தன் வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பா்களான சம்ராஜ் (வயது 20), சதீஷ் (24) ஆகியோர் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

இதுப்பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இது குறித்து அந்த பெண் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பர்களான சாம்ராஜ், சதீஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story