கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
கோட்டூர்
பொள்ளாச்சி அருகே சமத்தூர் இட்டேரி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கோட்டூர் போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு பெண், கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், கோட்டூரை சேர்ந்த அஞ்சலி (வயது 50) என்பதும், கஞ்சாவை வாங்கி வந்து பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியை சேர்ந்த ஓம் பிரகாஷ்(25) மற்றும் தினேஷ்(23) ஆகியோர் சின்னப்பம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஆனைமலை சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.